என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல்
நீங்கள் தேடியது "ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல்"
பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair
லண்டன்:
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வந்தது. மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமாக உரையாற்றினர்.
இதனிடையே, 1972-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைவது தொடர்பாக உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு மாற்றாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டம் ஒத்திவைக்கவேண்டும் என பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த முடிவு பிரிட்டனை பெரிய அளவில் பாதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நமது அரசு நாட்டின் நலன்களைப் பற்றிய யோசனை செய்வதை விட்டுவிட்டு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரின் நன்மைக்காக செயல்பட்டு வருகிறது, தலைவராக இருக்கவேண்டிய பிரதம மந்திரி ஒரு பிணை கைதியை போல உள்ளார்.
இதற்கிடையில், பிரிட்டனின் வருங்காலத்திற்காக போராடுவதில் முக்கிய பங்கு கொண்டுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் அதை செய்ய மறந்துவிட்டார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியால் முடியாது என்பதால் பாராளுமன்றம் தன்னைத் தானே உறுதிப்படுத்த வேண்டும்.
இப்போது மக்கள் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும், ஏன் எனில் எப்படிப்பட்ட நாடு வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது பிரிட்டனுக்கு பெரிய அடியாக இருக்கும். நாம் யோசிக்க அவகாசம் வேண்டியுள்ளது. எனவே மார்ச் 2019 என்ற காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும்.இரண்டாம் உலக போருக்கு பின்னர் நாம் எடுக்க இருக்கும் முக்கிய முடிவு இதுதான்.
உலகின் மிகப்பெரிய வணிகச் சந்தை மற்றும் மிகப்பெரிய அரசு யூனியன் என்னும் அந்தஸ்தை பிரிட்டன் இழந்துவிட்டது. அமெரிக்கா தனது முக்கிய நட்பை இழந்துவிட்டது. ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு நாம் தான் என்று கூறி கொள்ளலாம். ஆனால் அது உண்மையல்ல. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவெடுத்த பின்னர், அமெரிக்கா உடன் பிரிட்டம் நெருக்கமாக இருக்கிறதா?, உறவு பலமாதாக இருக்கிறதா?
இவ்வாறு அவர் கூறினார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X